சென்னை மக்கள் கவனத்திற்கு..! மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவுக்கான முதற்கட்ட முகாம்..!

சென்னை மக்கள் கவனத்திற்கு..! மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவுக்கான முதற்கட்ட முகாம்..!

tn magalir urimai thogai

சென்னை மாநகராட்சியில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவுக்கான முதற்கட்ட முகாம் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறும்.

2021 சட்டமன்றத் தேர்தலில் அப்போது முக்கிய தேர்தல் வாக்குறுதியாக பார்க்கப்பட்ட மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை திட்டத்தை தற்போது அமல்படுத்துவதற்கு தமிழக அரசு ஆயத்தமாகி வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.

செப்டம்பர் மாதம் முதல் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. அதற்கு விண்ணப்பிக்க மகளிர் அந்தந்த பகுதி ரேஷன் கடைகளின் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த டோக்கனை பெற்று விண்ணப்பத்தை நிரப்பி ரேஷன் கடையில் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவுக்கான முதற்கட்ட முகாம் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறும் என்றும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெறும் என்றும் சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது.

Join our channel google news Youtube