அட்டகத்தி தினேஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‘லப்பர் பந்து’ படத்தின் புதிய லுக்!

அட்டகத்தி தினேஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‘லப்பர் பந்து’ படத்தின் புதிய லுக்!

Lubber Pandhu

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் ‘லப்பர் பந்து’ படத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தற்போது நடிகர் தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு, லப்பர் பந்து’ படத்தின் அவரது தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளனர்.


போஸ்டரில் நரைத்த தாடியுடன் ஜெர்சி மற்றும் லுங்கி அணிந்து கொண்டு கிரிக்கெட் மட்டையை பிடித்தபடி, நடிகர் தினேஷ் காட்சியளிக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் பேனரின் கீழ், தயாரிக்கப்படும் இந்த திரைப்படத்தை கனா மற்றும் எஃப்ஐஆர் ஆகிய திரைப்படங்களில் வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்குகிறார்.

இது அவர் இயக்குனராக அறிமுகமாகவிருக்கும் முதல் திரைப்படமாகும். சமீபத்தில், லப்பர் பந்து திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், டப்பிங் பணிகள் தொடங்கியதாக தெரிவித்தனர்.

இந்த படத்தில் ஹரிஷ் மற்றும் தினேஷ் தவிர, கடைசியாக வதந்தி வெப் சீரிஸில் நடித்த சஞ்சனா மற்றும் பால சரவணன், ஸ்வாசிகா விஜய், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மேலும், இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube