தமிழன்டா என்னாலும்…ஹிந்தி தொகுப்பாளினிக்கு தக் லைஃப் கொடுத்த அட்லீ.!

ஹிந்தியில் கேள்வி கேட்ட தொகுப்பாளரிடம், இயக்குநர் அட்லீ தமிழில் பதிலளித்த சம்பவம் சிரிப்பை வரவழைக்கிறது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் சிஷ்யனாக இருந்து கொண்டு, ‘ராஜா ராணி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தற்போது ஷாருக்கானை இயக்கி பாலிவுட்டிலும் தனது முத்திரையை பதித்துவிட்டார்.

அவர் கடைசியாகஇயக்கிய ‘ஜவான்’  திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது என்றே சொல்லலாம். பாக்ஸ் ஆபிஸில் ரூ.1,100 கோடி வசூல் செய்திருந்தது.  இதனையடுத்து, பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்று அட்லீயிடம் ஒரு படத்தை இயக்குகங்கள் என்று கூறியதாக தகவல் வெளியானது.

அதனை தற்பொழுது உறுதிப்படுத்தியுள்ளார். விரைவில் ஒரு ஹாலிவுட் படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.  சமீபத்தில், தனியார் செய்தி ஊடகம் நடத்திய ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ என்ற நிகழ்ச்சியில், இயக்குனர் அட்லீ மற்றும் நடிகை கியாரா அத்வானி ஆகியோர் பங்கேற்று கொண்டு இதுவரை தங்கள் திரை வாழ்க்கையில் வெற்றியின் ரகசியங்கள் குறித்து  விவர்த்தனர்.

READ MORE – ஆயிரம் கோடி வசூல் செய்த ஜவான்! தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்த அட்லீ! 

அதாவது, இந்த நிகழ்வில் அட்லீ திரைப்பயணம் குறித்து பெண் தொகுப்பாளர் அவரிடம் கேள்விகளை கேட்டு வந்த நிலையில், அப்போது அவர் திடீரென ஹிந்தியில் கேள்விகளை முன்வைத்தார். அந்த இடத்தில் ஹிந்தி புரியாத அட்லீ, ‘நான் நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க’ எனக் கூற, தொகுப்பாளர் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்.

தற்பொது, தொகுப்பாளினி இந்தியில் கேள்வி கேட்டதற்கு, “நான் பாலிவுட் வரை சென்றாலும் நான் எப்பொழுதும் தமிழன்டா என்று சொல்வது போல்” இயக்குனர் அட்லீ தமிழில் பதிலளித்த சம்பவம் சிரிப்பை வரவழைக்கிறது. இது தொடர்பான காணொளியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment