காதலியை கொலை செய்த தடகள வீரர்… 10 ஆண்டுகளுக்கு பிறகு பரோலில் விடுதலை..!

காதலியை கொலை செய்த தடகள வீரர்… 10 ஆண்டுகளுக்கு பிறகு பரோலில் விடுதலை..!

காதலியை கொலை செய்த ஆஸ்கார் பிஸ்டோரியஸ்:

கடந்த 2013-ஆம் ஆண்டு காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி ‘பிளேட் ரன்னர்’ என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்க வீரர் பிஸ்டோரியஸ் தனது சொந்த வீட்டிலேயே காதலி ரிவா ஸ்டீன்காம்பை சுட்டுக் கொன்றார். திருடன் என்று தவறாக நினைத்து தான் காதலி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பிஸ்டோரியஸ் கூறினார். இந்த கொலை சம்பவம் உலகையே அதிர வைத்தது.

 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை:

இந்த கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நடந்த முதல் விசாரணையில் பிஸ்டோரியஸ் குற்றமற்ற கொலைக்குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 3 டிசம்பர் 2015 அன்று, தென்னாப்பிரிக்க உச்சநீதிமன்றம் பிஸ்டோரியஸ் கொலைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்து அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் வழக்கறிஞர்களால் கோரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் 2017ல் உச்சநீதிமன்றம் அவரது தண்டனையை 13 ஆண்டுகள் 5 மாதங்களாக இருமடங்காக உயர்த்தியது.

பரோலில் விடுதலை:

இதற்கிடையில் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் பரோல் கோரி மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஸ்கார் பிஸ்டோரியஸ் -க்கு பரோல் வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்கார் பிஸ்டோரியஸ் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளார். 13 ஆண்டு தண்டனையில் பிஸ்டோரியஸ் பாதி தண்டனையை  முடித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி அவர் பரோலில் சிறையில் இருந்து வரவுள்ளார்.

 

6 முறை தங்கப்பதக்கம்:

ஆஸ்கார் பிஸ்டோரியஸ் கார்பன் ஃபைபரால் செய்யப்பட்ட செயற்கை கால்களுக்காக ‘பிளேட் ரன்னர்’ என்று அழைக்கப்படுகிறார். பாராலிம்பிக்கில் 6 முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பிஸ்டோரியஸ் காதலி  ரீவா ஸ்டீன்காம்ப் ஒரு தென்னாப்பிரிக்க மாடல் ஆவார்.

author avatar
murugan
Join our channel google news Youtube