41 வயதில் 22 பந்துகளில் 84 ரன்கள் விளாசிய யுனிவர்சல் பாஸ்..! 2-வது முறையாக யுவராஜ் சாதனை சமன்..!

அபுதாவி டி 10 லீக்கில் கிறிஸ் கெய்ல் ஆட்டமிழக்காமல் 22 பந்துகளில் 84* ரன்கள் குவித்தார்.

கிரிக்கெட் உலகில் யுனிவர்ஸ் பாஸ் என்று செல்லமாக  அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் மிகவும் வயதானவராக இருக்கலாம், ஆனால் அவர் இன்னும் ஒரு இளம் வீரருக்கு சமமானவர் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அதற்க்கு ஏற்றாற்போல கிறிஸ் கெய்ல் இந்த வயதிலும் பல சாதனைகளை செய்து வருகிறார்.

தற்போது அபுதாவியில் டி 10 லீக் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மராத்தா அரேபியர்கள் vs அபுதாபி அணிக்கு இடையே போட்டி நடைபெற்றது. முதலில் இறங்கிய மராத்தா அரேபியர்கள் அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 97 ரன்கள் எடுத்தனர்.

பின்னர், இறங்கிய அபுதாபி அணி 5.3 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 100 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இப்போட்டியில் கிறிஸ் கெய்ல் வெறும் 12 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். இதனால் கெய்ல் முன்னாள் இந்தியா நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கின் சாதனையையும் சமன் செய்தார்.

இந்த போட்டியில் கிறிஸ் கெய்ல் ஆட்டமிழக்காமல் 22 பந்துகளில் 84* ரன்கள் குவித்தார். கெய்ல் ஒன்பது சிக்சர்களையும், ஆறு பவுண்டரிகளையும் அடித்தார். டி 10-ல் முகமது ஷாஜாத்தின் சாதனையை முறியடித்தார். ஷாஜாத் கடந்த 2018-ல் 12 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.

யுவராஜின் சாதனை முடியடிப்பு:

யுவராஜ் சிங் இங்கிலாந்துக்கு எதிராக 12 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அந்த போட்டியில் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்தார். இந்நிலையில், யுவராஜ் சிங்கின் இந்த சாதனையை கிறிஸ் கெய்ல் இரண்டாவது முறையாக சமன் செய்துள்ளார். கிறிஸ் கெய்ல் 2016 இல் பிக் பாஷ் லீக்கில் 12 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan