சட்டமன்ற தேர்தல் செலவு ரூ.621 கோடி -சத்யபிரதா சாஹு..!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கு ரூ.621 கோடி செலவாகும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா காலம் என்பதால் தேர்தல் செலவு அதிகமாகும். இந்த தொகையை அரசிடம் கேட்டுள்ளோம். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan