ரவிச்சந்திரன் அஷ்வின் காட்டம் !ஐபீஎல்லில் சென்னை அணிக்கு ஏலம் எடுக்காதது குறித்து பகிரங்க கருத்து …

ரவிச்சந்திரன் அஷ்வின் காட்டம் !ஐபீஎல்லில் சென்னை அணிக்கு ஏலம் எடுக்காதது குறித்து பகிரங்க கருத்து …

Default Image
இன்று நடைபெற்ற ஏலத்தில் அஷ்வினை ஏலம் எடுக்க சென்னை  அணி முன் வராததால்  அது   குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபில் 2018ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினை கிங்ஸ் 11 பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. கடும் போட்டிக்கு இடையே ரூ. 7.6 கோடி கொடுத்து அஸ்வினை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
முன்னதாக சென்னை அணி தோனி, ரெய்னா, ஜடேஜாவை  ரைட் டு மேட்ச் மூலம் அணிக்காக தக்கவைத்துள்ளதால், அஸ்வினை ஏலத்தில்தான் எடுக்க வேண்டும் என்ற நிலை உருவானது. சில நாட்களுக்கு முன், சென்னை அணியின் கேப்டன் தோனியும், அஸ்வினை ஏலத்தில் எடுக்க முன்னுரிமை தருவோம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் அஸ்வினை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
Image result for ravi ashwin csk
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தன்னை ஏலம் எடுத்தது குறித்து அஸ்வின்
” ஏலம் என்பது எப்போது சூதாட்டத்தின் இல்லம்தான். கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் என்னுடைய புதிய இல்லமாக இருக்கப் போவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிறந்த நினைவுகளை அளித்த சென்னை சூப்பர் கிங்ஸுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அஸ்வின் பஞ்சாப் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் பலரும் ஏமற்றமடைந்துள்ளனர். இது தொடர்பாக பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றர்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….
Join our channel google news Youtube