தேடி வந்த ஆங்கில பட வாய்ப்பு! வெற்றிமாறன் பதிலுக்கு காத்திருக்கும் சூர்யா?

நடிகர் சூர்யா தற்போது படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு நடிகர் சூர்யா அடுத்ததாக தன்னுடைய 43-வது திரைப்படமான சுதாகொங்கரா இயக்கும் “சூர்யா 43” படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கான படப்பிடிப்பும் அடுத்த ஆண்டு தொடங்கப்படவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியும் இருக்கிறது. ஆனால், சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ள வாடிவாசல் படம் எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பு தான் இன்னுமே வெளியாகவில்லை.

சமீபத்தில் ஒரு தகவலும் பரவியது. அது என்னவென்றால், வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று தான். ஆனால், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், சூர்யாவுக்கு ஆங்கில படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்து இருக்கிறதாம். அந்த ஆங்கில படத்தில் நடிக்க தயாரிப்பு நிறுவனம் கண்டிஷன் ஒன்று போட்டதால் தான் தற்போது சூர்யாவுக்கு சிக்கலாக அமைந்துள்ளதாம்.

சிவகுமார், சூர்யா மீது வழக்கு போட எனக்கு விருப்பமேயில்ல! இயக்குனர் அமீர் பேச்சு!

அது என்ன கண்டிஷன் என்றால் சூர்யா அந்த ஆங்கில படத்தில் நடித்தால் வேறு எந்த படத்திற்கும் தேதியை கொடுக்க கூடாது. முழுக்க முழுக்க தங்களுடைய படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு தான் அடுத்த படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கவேண்டும் என்று கூறிவிட்டதாம். இதனால் சூர்யா உடனடியாக வெற்றிமாறனை அழைத்து வாடிவாசல் படத்தை விரைவாக தொடங்கவேண்டும்.

வாடிவாசலை முடித்துவிட்டு எனக்கு ஒரு ஆங்கில படம் வந்துவிட்டது என்று கூறிவிட்டாராம். ஆனால், வெற்றிமாறன் தற்போது விடுதலை 2 படத்தில் பிசியாக பணியாற்றி வருவதால் இன்னும் சில மாதங்கள் ஆகுமாம். இருந்தாலும் வெற்றிமாறன் அடுத்த ஆண்டு 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவோம் அதன் பிறகு பார்த்துக்கொள்வோம் என்பது போல கூறிவிட்டாராம்.

அந்த 10 நாட்கள் வெற்றிமாறன் முழுக்க முழுக்க அமீர் மற்றும் நடிகர் சூர்யா காட்சியை தான் படமாக்க திட்டமிட்டு இருக்கிறாராம். இருந்தாலும் வெற்றிமாறன் சரியாக ஒரு தேதி சொல்லாததால் சூர்யா வெற்றிமாறன் பதிலுக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.