பிக்பாஸ்ஸில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயற்சி…,நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்… வருத்தத்தில் ஓவியா army…!

பிக்பாஸ்ஸில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயற்சி…,நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்… வருத்தத்தில் ஓவியா army…!

Default Image

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது முதலே பெரும்பாலானவர்களின் மனம் கவர்ந்த நபராக விளங்கியவர் ஓவியா. நிகழ்ச்சியின் இரண்டாவது வாரம் முதலே ஓவியா, சக போட்டியாளர்களால் எவிக்‌ஷனுக்காக தொடர்ந்து நாமினேட் செய்யப்பட்டப்போதிலும் மக்களின் ஆதரவுடன் அவர் தொடந்து காப்பாற்றப்பட்டு வந்தார். அவரின் இயல்பான குணங்கள் மக்களை வெகுவாக கவர்ந்ததை அடுத்து ஓவியா ஆர்மி ( Oviya Army ) எனும் பெயரில் ஹாஷ் டேக்குகளை உருவாக்கி, அவருக்கு ஆதரவாக மக்கள் தொடர்ந்து குரல்கொடுத்து வந்தனர். ஓவியாவுக்கு கிடைத்த ஆதரவு எனக்கு கிடைத்திருந்தால் நான் முதல்வர் ஆகிருப்பேன் என அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்களையே பொறாமை பட வைத்தது.

இந்நிலையில், சக பங்கேற்பாளரான ஆரவ் என்பவரிடம் காதல் வயப்பட்ட ஓவியா அதனை, அவரிடமே வெளிப்படையாகவும் தெரிவித்தார். ஆனால், ஆரவ் ஓவியாவின் காதலை ஏற்க மறுத்துதோடு, அவரை ஒதுக்கவும் தொடங்கினார். இதனால் கடந்த சில தினங்களாக கடும் மனவுளைச்சலுக்கு உள்ளான ஓவியா, தான் என்ன செய்கிறோம் என்பதையே புரியாதவர் போல் நடந்துகொள்ளத்தொடங்கினார். விருப்பமில்லை என தெரிவித்த பின்னரும் ஆரவுக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுக்கத்தொடங்கினார். இதனால் சகபோட்டியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பினை சந்தித்தபோதும் அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தன்னிலை மறந்து செயல்படத்தொடங்கினார்.

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் விரக்தியின் உச்சகட்டத்திற்கே சென்ற ஓவியா திடீரென பிக்பாஸ் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். சக பங்கேற்பாளர்களான ஸ்நேகன் மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் விரைந்து உடனே சென்று அவரை காப்பாற்றி மீட்டனர். இதையடுத்து மனநல மருத்துவர்களால் அவர் பரிசோதனை செய்யப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து காரில் வெளியேறுவது போன்ற ஒரு புகைப்படமும் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் பரணியும் சக பங்கேற்பாளர்களின் நெருக்கடியை சமாளிக்கமுடியாமல் பித்து பிடித்தவர் போல் மாறினார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டின் சுவரைத்தாண்டி குதிக்கும் விபரீத முயற்சியிலும் அவர் ஈடுபட்டார். அதுமட்டுமல்லாமல் பரணியுடன் ஏற்பட்ட ஒரு பிரச்சனையில் அவரை சிலிண்டரை கொண்டு தாக்க முற்பட்டார் கஞ்சா கருப்பு. அருகில் இருந்தவர்கள் தடுக்காமல் போயிருந்தால் அன்றே பிக்பாஸ் வீடு ரத்த களரியாக மாறியிருக்கும்.

Join our channel google news Youtube