அரியலூர் நாட்டுப்பட்டாசு ஆலையில் தீ விபத்து.! 4 பேர் உயிரிழப்பு.!

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூர் கிராமத்தில் தனியார் நாட்டுப்பாட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. ராஜேந்திரன் என்பவர் அதனை நிர்வகித்து வருகிறார். தீபாவளி நெருங்கும் சமயம் என்பதால் பட்டாசு தயாரிக்கும் வேலைகள் வெகு தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல வேலை செய்து கொண்டு இருக்கும் போது காலை 9.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பாட்டாசு ஆலை முழுவதும் எரிந்து சேதமானது. உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயசித்தனர்.

இந்த தீ விபத்தில் முதலில் ஒருவர் பலியாகி இருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளளது. ஏற்கனவே,  இதில் படுகாயமடைந்த 5 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பட்டாசு தொழிற்சாலை அருகே குடோன் இருப்பதால் தீ மளமளவென பரவி வருகிறது. இதனை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஏற்கனவே முன்னதாக ஓசூரில் பட்டாசு கடையில் தீ விபத்து விபத்து 14 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிட தக்கது.  தீபாவளி நெருங்கும் சமயத்தில் இம்மாதிரியான தீ விபத்துகளை தடுக்க அரசும், பட்டாசு தொழிற்சாலை நிர்வாகமும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.