தலைவர் 171 படத்தில் நீங்க இருக்கீங்களா? இயக்குனர் ரத்னகுமார் சொன்ன பதில்!

தலைவர் 171 படத்தில் நீங்க இருக்கீங்களா? இயக்குனர் ரத்னகுமார் சொன்ன பதில்!

lokesh kanagaraj and rajini

மேயாத மான் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் ரத்னகுமார்.  இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் சந்தானத்தை வைத்து ‘குளு குளு’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் சரியான வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு பிறகு அவர் எந்த படத்தையும் இன்னும் இயக்காமல் இருக்கிறார்.

ரத்னகுமார் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களுக்கு வசனம் எழுத எழுத்தாளராக பணியாற்றி இருந்தார். தொடர்ச்சியாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களுக்கு இணை இயக்குனராக ரத்னகுமார் தான் எழுத்தாளராக பணியாற்றியும் வருகிறார். இதனையடுத்து லோகேஷ் அடுத்ததாக ரஜினியின் 171-வது திரைப்படத்தை இயக்க கமிட் ஆகி இருக்கிறார்.

தற்காலிகமாக அந்த படத்துக்கு “தலைவர் 171” என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்திலும் எழுத்தாளராக ரத்னகுமார் பணியாற்றுவாரா என்ற கேள்வி திடீரென கிளம்பி இருக்கிறது. ஏனென்றால், லியோ படத்தின் வெற்றி விழாவில் ரத்னகுமார் எவ்வளவு உயர பறந்தாலும் பசி எடுத்து என்றால் கீழே இறங்கி தான் ஆகவேண்டும் என ரஜினி கூறிய காக்க- கழுகு கதைக்கு பதில் கூறும் வகையில் பேசி இருந்தார்.

ரத்னகுமார் இப்படி பேசியவுடன் ரஜினி ரசிகர்கள் அனைவரும் ரத்னகுமாரை திட்ட தொடங்கினார்கள். இதனையடுத்து, பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ரத்னகுமாரிடம் நீங்கள் தலைவர் 171 படத்தில் இருக்குறீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்க்கு பதில் கூறிய ரத்னகுமார் ” படத்தின் தலைப்பு அறிவிக்கும் வரை என்னுடைய பெயர் இருப்பதாக வெளியே அறிவிப்பு வராது.

நான் இந்த திரைப்படத்தில் இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு ஏனென்றால், நான் அடுத்தாக ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறேன். தற்போது அதற்கான வேளைகளில் தான் ஈடுபட்டு வருகிறேன். அந்த படத்தின் கதை லோகேஷ் கனகராஜுடையது. அந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தான் தயாரிக்கவும் செய்கிறார்” என கூறியுள்ளார். இதன் மூலம் தலைவர் 171 படத்தில் ரத்னகுமார் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

Join our channel google news Youtube