30.5 C
Chennai
Saturday, June 10, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில்...

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்… கார்கே.!

புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த...

இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை...

மாணவர்களே ரெடியா.? இப்பவே குறிச்சு வெச்சுக்கோங்க..’தேர்வு’ தேதியை அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்.!!

அடுத்த ஆண்டிற்கான பொதுத்தேர்வு தேதி யை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

இன்றுடன் 1-9ம் வகுப்புகளுக்கு அனைத்து தேர்வுகள் முடிவடைந்துள்ளதாள் நாளை 29-ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 3ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 20-ஆம் தேதியும் நிறைவடைந்து விடுமுறையில் உள்ளது.

இதனையடுத்து,  6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் எனவும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்து அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்ததோடு அடுத்த ஆண்டு (2023) பொதுதேர்வுகள் தொடங்கும் தேதியையும் அறிவித்துள்ளார்.

அதன்படி, அடுத்தாண்டு ஏப்ரல் 8ம் தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 19ம் தேதி 11ம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 18ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு தொடங்கும் என அறிவித்துள்ளார்.