மாணவர்களே ரெடியா? வரும் 19ம் தேதி 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

மாணவர்களே ரெடியா? வரும் 19ம் தேதி 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

Education Department

வரும் 19ம் தேதி 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

தமிழ்நாட்டில் மார்ச்/ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 2022-23-ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19-ஆம் தேதி வெளியிடப்படும்  அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு  மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம். மேலும், மாணவர்களின் கைபேசி எண்களுக்கு குறுந்செய்திகள் மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exam Results
Exam Results [Image Source : Twitter/@nanasaiin]
Join our channel google news Youtube