நயன்-விக்கியின் குழந்தைகள்… ஆணா? பெண்ணா? க்ளூ கொடுத்த அந்த புகைப்படம்.!

புதுமண தம்பதிகளான நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளதாக நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் குழந்தகளின் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்தார்.

Nayan-Vignesh

இதனை தொடர்ந்து,  நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்கள் குவியத் தொடங்குகியது மட்டும்மல்லாமல் அவர்களது குழந்தைகளின் புகைபடங்களும் இணையத்தில்  வைரலாகி வருகிறது. இதற்கிடையில், அந்த குழந்தைகள் ஆணா, பெண்ணா என்பது குறித்து ரசிகர்களின் கேள்விக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு புகைப்படம் மூலம் பதிலளித்துள்ளார்.

nayan wikki

தனது, இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து கொண்ட அந்த புகைப்படத்தில் சிவன்- பார்வதியுடன் அவர்களின் பிள்ளையான விநாயகர்-முருகருடன் இருக்கும் புகைப்படத்தை வெளிப்படுத்தி ‘வெல்கம் டு மை உயிர் மற்றும் உலகம்’ என குறிப்பிட்டுள்ளார். அதாவது இரண்டும் ஆண் குழந்தகள் தான்.! என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்களேன் – ஜூன்-9 திருமணம்.! அக்டோபர்-9 இரட்டை குழந்தை.! சர்ச்சையில் சிக்கிய நயன்-விக்னேஷ்…?

Nayan-Vignesh

நயன்தாரா தற்போது சில முக்கிய படங்களில் ஒரு பகுதியாக நடித்து வருகிறார். அவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். அதேபோல், இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தின் 62-வது படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில், அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment