பாஜகவின் முதல் கையெழுத்து.. பெரியார் சிலை அகற்றம்.? அண்ணாமலை அதிரடி அறிவிப்பு.!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் “என் மண் மின் மக்கள்” எனும் பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று ராமேஸ்வரத்தில் தொடங்கி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் சென்ற அண்ணாமலை நேற்று, திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் “என் மண் என் மக்கள்” பயணத்தை மேற்கொண்ட போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் கூறுகையில், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக கோவில் முன் இருக்கும் கடவுள் மறுப்பாளர்கள் சிலை அகற்றப்படும். கடவுளை நம்புபவன் முட்டாள் என சொல்லியவரின் சிலைகள் (பெரியார் சிலைகள்) அகற்றப்படும். அதற்கு பதிலாக ஆழ்வார்கள் நாயன்மார்கள், தமிழ் புலவர்கள், திருவள்ளுவர் சிலை அங்கு வைக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், பாஜக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற அந்த நாள் இந்து அறநிலையத்துறையின் கடைசி நாள்.  ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்து அறநிலையத்துறை கலைக்கப்படும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ஸ்ரீரங்கத்தில் உரையாற்றினார்.

ஸ்ரீரங்கம் கோவில் முன்னர் கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்து கோவில்கள் நிர்வாகத்தை அந்தந்த கோவில் உடையதாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அரசு இந்து அறநிலையத்துறையின் கீழ் கோவில்கள் நிர்வாகம் வரக்கூடாது என்பது பாஜகவின் கொள்கை முடிவுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.