அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் புகைப்படம்! உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம்..!

அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் புகைப்படம்! உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம்..!

strike

நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படத்தை அகற்ற கூறும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயநீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.

சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் படங்களை தவிர வேறு எந்த தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெறக்கூடாது என்றும், அண்ணல் அம்பேத்கர் படத்தை நீதிமன்றங்களில் வைக்க கூடாது என்றும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், நீதிமன்றத்தில் அம்பேத்கர் படத்தை வைக்க கூடாது என்ற சுற்றறிக்கையை திரும்ப பெறுமாறு அரசியல் தலைவர்கள் மற்றும்  பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டின் நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படத்தை அகற்ற கூறும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயநீதிமன்ற வழக்கறிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தி, கையில் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Join our channel google news Youtube