அலிபாபா நிறுவனம் கிட்டத்தட்ட 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது..

2021ஆம் ஆண்டில் 45.14 பில்லியன் யுவானாக இருந்த அலிபாபா நிகர வருமானம், ஜூன் காலாண்டில்  22.74 பில்லியன் யுவானாக 50 சதவீதம் சரிவை பதிவு செய்துள்ளது.

ஊடக அறிக்கைகளின்படி, சீன தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா மந்தமான பொருளாதாரத்திற்கு மத்தியில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த மாதம் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

குறிப்பாக, ஜூன் காலாண்டில் 9,241 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது என்று சவுத் சீனா மார்னிங் போஸ்ட்டில் இருந்து வரும் அறிக்கை குறிப்பிட்டது. சமீபத்திய பணிநீக்கத்துடன் அலிபாபா ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கையை சுமார் 245,700 ஆக குறைத்துள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது.

சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள ட்விட்டர், டிக்டாக், ஷாபிபை, நெட்பிலிக்ஸ், காயின்பேஸ் போன்ற பல தொழில்நுட்ப நிறுவனங்கள், கடந்த மாதம் 32000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தன.

author avatar
Dhivya Krishnamoorthy

Leave a Comment