இனி அரைத்த மாவை அரைக்க மாட்டேன்…அஜித் குமார் எடுத்த அதிரடி முடிவு.! ஏகே 63 அப்டேட்…

அஜித் குமார் தனது 62வது படமான ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர்து அடுத்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்த பிறகு அஜித்துடன் நெருக்கமாக இருந்து வாருகிறார். இதனால், அஜித்துக்கு ஏற்றவாரு ஸ்கிரிப்டை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது, இந்த படம் குறித்த கூடுதல் தகவல் என்னவென்றால், பிறபல முன்னணி தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் ‘ஏகே 63’ படத்தை தயாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பதிலாக தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கவுள்ளதாக நேற்றைய தினம் கிசுகிசுக்கப்பட்டது.

மேலும் இதில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஒளிப்பதிவாளராக நீரவ் ஷாவும் இணைந்துள்ளார்கள் என்றெல்லாம் பேச்சுக்கள் அடிப்பட்டது. இதனால் சற்று குழப்பம் ஏற்பட்டது. ஆனால், வதந்திகளுக்கு அஜித் தரப்பு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார். தெலுங்கு இயக்குனர் இயக்கவில்லை என்று சினிமா செய்தி தகவல் வழங்கும் வலைப்பேச்சு உறுதி செய்துள்ளது.

பொதுவாக, தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்கிறது என்றால், அங்கிருந்தே இயக்குனரையும் தேர்வு செய்கின்றனர். அதுபோல், இந்த படத்திலும் அவ்வாறு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சரி எது என்னவோ, இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக காத்திருப்போம்.

AK 63 படத்தை கைவிட்ட ஆதிக்? மொத்தமும் தெலுங்கு பக்கம் சென்ற சம்பவம்.!

ஏற்கனவே, மைத்ரி மூவி மேக்கர்ஸ், தெலுங்கில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ போன்ற பெரிய படங்களை வழங்கியுள்ளது. ஒரு வேலை இந்த  தகவல் உறுதி செய்யப்பட்டால் இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் முடிவு

முந்தைய காலங்களில் அஜித் குமார் ஒரு திரைப்படம் நடிக்கிறார் என்றால், அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு தொடர்ந்து 3 படங்களில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்து விடுவாராம். இனிமேல், அந்த மாதிரி ஒப்பந்தம் செய்யபோவதில்லை என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளார். ஆம், அந்த தகவலின்படி, இனிமேல் ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிப்பதாக ஒப்பந்தம் செய்ய இருப்பதாக முடிவு செய்துள்ளராம்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.