விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன்!

விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன்!

aishwarya rai

சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பற்றி வதந்தியான தகவல்கள் பரவுவதும் அதன்பிறகு அந்த வதந்தி குறித்து அந்த பிரபலங்களும் விளக்கம் அளிப்பது உண்டு. அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய கணவர் அபிஷேக் பச்சனுக்கும் விவகாரத்து ஆகிவிட்டதாக பரபரப்பான செய்தி வெளியாகி இருந்தது.

இந்த தகவலை பாலிவுட் சினிமாவில் தன்னுடைய தகவலை மூலம் சர்ச்சையை கிளப்பி விடும் உமர் சந்த் தான் கூறிருந்தார். அபிஷேக் பச்சன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது அவருடைய கையில் மோதிரம் இல்லை எனவே அவருடைய விவாகரத்து செய்தி உண்மை தான் என்று புகைப்படங்களை வெளியீட்டு சிலர் தகவலை பரப்பி வருகிறார்கள்.

நடிகை ஐஸ்வர்யா ராய்-க்கு விவாகரத்தா? பரபரப்பை கிளப்பிய செய்தி!

இது ஒரு புறம் இருக்க மற்றோரு புறம் நடிகை ஐஸ்வர்யா ராய்  தன்னுடைய மகள் ஆராத்யாவுடன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டு மகளுடன் இணைந்து கொண்டு எந்த கவலையும் இல்லாமல் நடனம் ஆடி கொண்டு இருந்தார். எனவே, இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடந்திருந்தால் எதற்காக ஐஸ்வர்யா ராய் அவருடைய மகளுடன் இணைந்து நடனம் ஆட போகிறார்? என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுந்தது.

இருந்தாலும் இவருடைய விவாகரத்து செய்தி கொஞ்சம் கூட ஓயவில்லை  எனவே, இந்த செய்தி பெரிய அளவில் வைரலானதால் இதை பற்றி ஐஸ்வர்யா ராய் அல்லது அபிஷேக் பச்சன் இருவரில் யாரவது விளக்கம் கொடுப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இதனை பற்றி பேசி விளக்கம் அளிக்காமல் தங்களுடைய செயல் மூலமே விளக்கம் அளித்துள்ளனர்.

அதன்படி, விவாகரத்து வதந்தி செய்தி வைரலானதை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொன்டுள்ளார். இதனால் இவர்களுடைய விவாகரத்து செய்தி முற்றிலும் வதந்தியான ஒரு தகவல் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது.  மேலும், ஐஸ்வர்யா ராய் பிரபல பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.2011-ஆம் ஆண்டு முதல் பெண் குழந்தை ஆராத்யாவை பெற்றுக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube