ஏர் இந்தியாவுக்கு புதிய CEO நியமனம்!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புதிய சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனராக கேம்பல் வில்சன் நியமனம்.

சிங்கப்பூரில் ஏர்லைன்சில் குறைந்த கட்டண துணை விமான நிறுவனமான ஸ்கூட்டின் முந்தைய தலைவரான கேம்ப்பெல் வில்சன், டாடா குழுமத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி (CEO) மற்றும் நிர்வாக இயக்குனராக (MD) நியமிக்கப்பட்டுள்ளார். 50 வயதுடைய வில்சன், விமான போக்குவரத்துக்கு துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். துருக்கியின் இல்கர் அய்சி, ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்க வேண்டாம் என்று முடிவு செய்ததைத் தொடர்ந்து, வில்சனின் நியமனம் அவரது முந்தைய அரசியல் தொடர்புகள், தொடர்பாக இந்தியாவில் எதிர்ப்புக்கு வழிவகுத்தது.

இந்த நியமனம் குறித்து கருத்து தெரிவித்த என் சந்திரசேகரன், “ஏர் இந்தியாவிற்கு கேம்ப்பெல்லை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் பல செயல்பாடுகளில் முக்கிய உலகளாவிய சந்தைகளில் பணிபுரிந்த ஒரு தொழில்துறை அனுபவம் வாய்ந்தவர் என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி ஏர்லைன்ஸ் ஏலத்தில் வெற்றி பெற்ற பின்னர், ஜனவரி 27-ஆம் தேதி டாடா குழுமம் ஏர் இந்தியாவை தன் வசப்படுத்தியது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்