குன்னத்தூர் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டிக்கொலை!!இரட்டைகொலையால் பரபரப்பு

குன்னத்தூர் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டிக்கொலை!!இரட்டைகொலையால் பரபரப்பு

மதுரை  மாவட்டம் குன்னத்தூர் அதிமுக ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர் முனுசாமி இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.  இரட்டை கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ,மாவட்டம் திருமங்கலம் அருகே குன்னத்தூர் கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக கிருஷ்ணன் உள்ளார்.இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியின்றி ஊராட்சி தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டவர்.

இன்று  காலை குன்னத்தூர் அதிமுக ஊராட்சி தலைவர் கிருஷ்ணன், உறவினர் முனுசாமி இருவரும் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இரட்டை படுகொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.author avatar
kavitha
Join our channel google news Youtube