நான் பாஜகவில் இணைந்துவிட்டேனா,? பிரதமரை சந்தித்த பின் அர்ஜுன் பேட்டி.!

பிரதமர் மோடி நேற்று கேலோ இந்தியா 2024 விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்திருந்தார். நேற்று மாலை சென்னை வந்த பிரதமரை, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன் பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்று விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடியின் தமிழக பயணம்… திருச்சி, மதுரை, ராமேஸ்வரம்.!

விழா நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் பிரதமர் மோடி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டார். அந்த சமயம் நடிகர் அர்ஜுன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். இதனை அடுத்து, அர்ஜுன் பாஜகவில் இணைந்து விட்டாரா என பல்வேறு கேள்விகள் எழுந்தன.

இது குறித்து உடனடியாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அர்ஜுன், தான் பாஜகவில் இணைந்து விட்டதாக கூறப்படும் செய்தியை முற்றிலும் மறுத்தார். மேலும், தனக்கு அரசியல் எதுவும் தெரியாது என்றும் அவர் கூறினார்.

நடிகர் அர்ஜுன் செய்தியாளர் சந்திப்பில்  கூறுகையில், நான் கட்டியுள்ள கோவிலுக்கு பிரதமர் மோடியை தரிசனம் செய்ய அழைத்துள்ளேன். அவரும் வருவதாக உறுதியளித்துள்ளார். இதுதான் நான் பிரதமரை முதல் முறையாக சந்திக்கும் தருணம். எனக்கு பிடித்த ஒரு நல்ல நபர் பிரதமர் மோடி. அதனால் நான் அவரை சந்தித்தேன். மற்றபடி இதில் அரசியல் எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்தார் நடிகர் அர்ஜூன்.

நடிகர் அர்ஜுன் , சென்னை போரூர் பெருகம்பாக்கத்தில் உள்ள தனது தோட்டத்தில் பகவான் அனுமாருக்கு  பெரிய கோயில் ஒன்றை கட்டியுள்ளார். அங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 28 அடி உயரமும் , 17 அடி அகலமும் கொண்ட பிரமாண்ட அனுமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.