ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு விபத்து !

ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு விபத்து !

Default Image

காபூலில் வெடிகுண்டுகளுடன் வந்த ஆம்புலன்ஸ் வெடித்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.
Related image
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ள பகுதியில் உள்ள சோதனைச் சாவடிக்கு ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அதைக் காவலர்கள் தடுத்து நிறுத்தியபோது அதில் ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டைத் தீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இந்தத் தாக்குதலில் காவல்துறையினர், அப்பகுதியில் நின்றிருந்தோர் என 17பேர் உயிரிழந்தனர். உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 110பேர் சிகிச்சை பெற்றுவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

Join our channel google news Youtube