நாடாளுமன்ற தேர்தல்..! அதிமுக விருப்ப மனு பெறுவதற்கான அவகாசம் நீட்டிப்பு

ADMK: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக விருப்ப மனுக்களை பெறுவதற்கான கால அவகாசம் மார்ச் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதில் வலுவான தனி கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் அதிமுக உறுதியாக உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

Read More – மக்களவை தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டுவர்! திருமாவளவன், செல்வப்பெருந்தகை கூட்டாக பேட்டி

ஏற்கெனவே தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர், துறை சார்ந்தவர்களின் கருத்துகளை பெற்று தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்க, மனு விநியோகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுலகத்தில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கியது.

Read More – அதிமுக-தேமுதிக இடையே குழு அமைத்து பேச்சுவார்த்தை: பிரேமலதாவை சந்தித்த எஸ்.பி. வேலுமணி பேட்டி

விருப்ப மனுக்களை பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.20 ஆயிரம், தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.15 ஆயிரம் கட்டணத் தொகையை செலுத்தி வாங்கினர். இன்றுடன் விருப்ப மனு பெறுவது முடியும் என முதலில் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விருப்ப மனு பெறும் கால அவகாசம் இன்று மாலையுடன் நிறைவடைய இருந்தது. இதனை மார்ச் 6ஆம் தேதி வரை நீட்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

Leave a Comment