அஜித் பட மெகா ஹிட் இயக்குனர் படத்தில் அதிதி.! அடுத்தடுத்து வெளியான அதிரடி அப்டேட்ஸ்…

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிவிட்டார். முதல் படமே கார்த்திக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க அந்த படத்தில் தேன்மொழி கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

Aditi Shankar

அதற்கு அடுத்த படமே சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துவிட்டது. தற்போது அந்த படத்தில் தான் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்களேன்- அதை கழட்டி நடிக்க சொன்ன படத்திலிருந்து விலகிடுவேன்… அடம் பிடிக்கும் சீரியல் சீட்டு.!

aditi shankar

தொடர்ந்து பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருவதால், அதிதி ஷங்கர் மிகவும்  உற்சாகத்தில் இருக்கிறார். இதற்கிடையில், அதிதி ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் வகையில், ஒரு தகவல் கிடைத்துள்ளது. அது அது என்னவென்றால், நடிகை அதிதி ஷங்கர் அடுத்ததாக இயக்குனர் விஸ்னு வரதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம்.

aditi shankar vishnuvardhan director

ஏற்கனவே அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என ஹிட் படங்களை கொடுத்த விஸ்னு வரதன் அடுத்ததாக அதிதி ஷங்கரை வைத்து படம் இயக்கவுள்ளதாக பரவும் தகவலால் ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது என்றே கூறலாம். விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment