அடேங்கப்பா..!தினமும் மோர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

Butter milk-மோர் குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் காண்போம்.

மோரின் நன்மைகள் :

  • மோர் தையிரிலிருந்து பிரித்து எடுக்கப்படும் பானமாகும் .கால் லிட்டர் மோரில் 260 மில்லி  கால்சியம் சத்து  உள்ளது.தையிரிலிருந்து முறையாக வெண்ணையை பிரித்து எடுப்பது தான் மோர் ,அதற்கு மாற்றாக தற்போது தயிரை மிக்ஸியில் அடித்து கிடைப்பது அல்ல .
  • உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் உணவுகளை குறைவாகத்தான் எடுத்துக் கொள்வார்கள் ,அப்போது அவர்களுக்கு சத்துக்களும் குறைவாக கிடைக்கும். இந்தப் பற்றாக்குறையை தீர்க்க ஒரு கிளாஸ் மோர் அருந்துவது நல்ல தீர்வாக இருக்கும்.
  • மோரில்  உள்ள எலெக்ட்ரோலைட்கள் உடல் வறட்சி  அடையாமல் பார்த்துக் கொள்ளும்.கலோரி மற்றும் கொழுப்பு மிக குறைவு .
  • தினமும் நாம் மோர் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படும், உடல் சூடு மற்றும் தாகம் குறையும்.
  • மோரில் உள்ள ரிபோபிளவின் சத்து அல்சர் புண், வாய்ப்புண்களை ஆற்ற உதவும் .அதனால் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்  .
  • மோர் குடிப்பதன் மூலம் கொழுப்புகள் கரைக்கப்படும் ,செரிமானம் தொந்தரவு இல்லாமல் நடக்கும்.மேலும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
  • கார உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது நெஞ்செரிச்சல் ஏற்படும், அந்த சமயங்களில் ஒரு கிளாஸ் மோர் எடுத்துக் கொண்டால் நல்ல தீர்வாக அமையும்.
  • சில நேரங்களில் அதிக உணவுகளை உட்கொள்ளும் போது வயிறு மந்தமாக இருக்கும், அந்த நேரங்களில் மோர் குடித்தால் உணவுகளில் உள்ள கொழுப்புகள் கரைக்கப்பட்டு வயிறு லேசாகும்.
  • தினமும் மோரை  குடித்து வந்தால் முகம் பளபளப்பாகும் ,முகப்பருக்கள் வராமல் பாதுகாக்கவும் செய்யும்.உடல் புத்துணர்ச்சியாக இருக்கும் .

மோரில்  நம் உடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது ஆகவே தினமும் உணவுக்குப் பின் எடுத்துக் கொண்டால் அதன் எண்ணற்ற பலன்களை பெற முடியும்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.