காதலானுக்கு ஏற்பட்ட காய்ச்சலால் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட நடிகை ஸ்ரேயா!

காதலானுக்கு ஏற்பட்ட காய்ச்சலால் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட நடிகை ஸ்ரேயா!

Default Image

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்கு ஒவ்வொரு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, ஒவ்வொருவரும் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம்.
இந்நிலையில், நடிகை ஸ்ரேயா  அவரது காதல் கணவரான ஆண்ட்ரி கோச்சுடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார். இதனையடுத்து, ஆண்ட்ரி கோச்சுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால், ஸ்ரேயா தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
அன்ட்ரியை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு கொரோனா தொற்று இல்லை என கூறிய பின்னும், இருவரும் முன்னெச்சரிக்கையாக தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

Join our channel google news Youtube