கடுமையான உடற்பயிற்சியில் நடிகை ரித்திகா சிங்! எல்லாம் ரஜினி படத்திற்காக தான்!

கடுமையான உடற்பயிற்சியில் நடிகை ரித்திகா சிங்! எல்லாம் ரஜினி படத்திற்காக தான்!

ritika singh and rajini

நடிகை ரித்திகா சிங் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதற்குள் சென்று அந்த கதாபாத்திரத்திற்கு எப்படி நடிக்கவேண்டுமோ அப்படியே நடித்து கலக்கி விடுவார். குறிப்பாக இவருடைய நடிப்பில் வெளியான ‘இறுதிசுற்று’ படம் எல்லாம் நம்மளால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அருமையாக நடித்திருப்பார்.

கடைசியாக ரித்திகா சிங்  விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக கொலை திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு விமர்சனத்தை பெறவில்லை என்றாலும் கடைசியாக  நடித்த கதாபாத்திரம் சற்று பேசப்பட்டது. சமீபத்தில் இந்த திரைப்படம் ஓடிடியில் கூட வெளியாகி இருந்தது.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன கிங் ஆப் கோதா திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலில் மட்டும் கவர்ச்சியாக நடனம் ஆடி இருந்தார். அவருடைய அந்த கவர்ச்சி நடனமும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து அந்த படத்தின் ப்ரோமோஷனுக்கு முக்கிய காரணமாக உதவியது.

அனிமல் படத்தில் நடிக்க ராஷ்மிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில் இதையெல்லாம் தொடர்ந்து அவர் தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் தலைவர் 170 திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தில் அவர் நடிப்பதை பட குழு அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டது.

படத்திற்கான படப்பிடிப்பு ஒரு பக்கம் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், எப்போதுமே தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகை ரித்திகா சிங் தற்போது கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவருடைய வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் கடுமையான உடற்பயிற்சி செய்வதை நாம் காணலாம். எனவே இதை நினைத்துப் பார்க்கையில் கண்டிப்பாக அவர் தலைவர் 170 படத்திற்காக தான் இப்படி உடற்பயிற்சி செய்கிறார் என்பது தெரியவந்துள்ளது.  இவர் இப்படி கடுமையாக உடற்பயிற்சி செய்து வருவதால் படத்தில் அவருக்கு இறுதி சுற்று படத்தை போல ஒரு நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Join our channel google news Youtube