அந்த நடிகர் கூட நடிச்சே ஆகணும்! நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் மிகப்பெரிய ஆசை!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவில் சூர்யா, கார்த்தி சிவகார்த்திகேயன், கமல்ஹாசன் ஆகியோருடைய படங்களில் நடித்து விட்டார். ஆனால் தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகராக திகழும் விஜயுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் கூட அவர் நடிக்கவில்லை. அவருக்கும் நடிகர் விஜய்க்கும் ஜோடி பொருத்தம் நன்றாக இருப்பதால் ஒரு படத்திலாவது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவது உண்டு.

அப்படித்தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் விஜயுடன் நடித்த ஆவலுடன் காத்திருக்கிறாராம். இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரே தெரிவித்தும் உள்ளார். பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் தொகுப்பாளர் எந்த தமிழ் நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஆசை இருக்கிறது என்ற கேள்வியை கேட்டார்.

குட்டை பாவாடையில் கும்முனு இருக்கீங்க! ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

அந்த கேள்விக்கு பதில் அளித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் “எனக்கு விஜய்யுடன் நடிக்க மிகவும் ஆர்வம் இருக்கிறது அவருடைய நடனம் அவருடைய ஸ்டைல் அவருடைய நடிப்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவரை முதன்முதலாக எப்படி பார்த்தோமோ அதே போல தான் இன்னும் இளமையாக இருக்கிறார். நடன ஆடும் போதெல்லாம் அவருக்குள் இருக்கும் வலிமை  எல்லாம் நமக்கு தெரியும்.

அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் அதுதான் என்னுடைய மிகப்பெரிய ஆசை. கண்டிப்பாக அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அந்த திரைப்படத்தில் கண்டிப்பாக நடிப்பேன். எனவே, அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்” என ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் விரைவில் உங்களுக்கு விஜய் உடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என கூறி வருகிறார்கள்.

மேலும், நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2 திரைப்படத்திலும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதில் அயலான் திரைப்படம் அடுத்த ஆண்டு 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.