இது அல்ட்டிமேட்! வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடைசியாக சிவகார்திகேயனுக்கு ஜோடியாக அயலான் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் தற்பொழுது கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் ரகுல் ப்ரீத் சிங் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வித்தியாசமான புகைப்படங்களை வெளியீட்டு சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வித்தியாசமான முறையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

திருமணத்திற்கு முன்பு சின்ன பார்ட்டி? காதலருடன் ஜாலி பண்ணும் ரகுல் ப்ரீத் சிங்!

அதனை தொடர்ந்து தற்போது அட்டைப்பட விளம்பரத்திற்காக ரகுல் ப்ரீத் சிங்  மிகவும் வித்தியாசமான உடை அணிந்துகொண்டு அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த பலரும் அடேங்கப்பா அழகு மிஞ்சுது என கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)

இதற்கிடையில், ரகுல் ப்ரீத் சிங் ஜாக்கி பக்னானி இருவரும் காதலித்து வருவதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள். ரகுல் ப்ரீத் சிங் ஜாக்கி பக்னானி இருவருக்கும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி, கோவாவில் திருமணம் செய்து கொள்ளஉள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment