கண்ணாலேயே கொள்ளுறீங்க.! நடிகை மஹிமா நம்பியாரின் வைரல் கிளிக்ஸ்.!

கண்ணாலேயே கொள்ளுறீங்க.! நடிகை மஹிமா நம்பியாரின் வைரல் கிளிக்ஸ்.!

Mahima Nambiar

2010ம் ஆண்டு திரையுலகில் நுழைந்த நடிகை மஹிமா நம்பியார், சாட்டை திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அந்த சமயத்தில் மஹிமா நம்பியாரின் கதாபாத்திரம் சிறிது பேசப்பட்டிருந்தாலும், அதன் பிறகு பெரிதாக எதுவும் பேசப்படவில்லை.

Mahima Nambiar
Mahima Nambiar [Image Source: X/@ctcupdates]

பிறகு என்னமோ நடக்குது, மொசக்குட்டி, குற்றம் 23 என சில திரைப்படங்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் வெளியான கொடிவீரன் திரைப்படத்திலும், விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான அசுரகுரு படத்திலும் ஜோடியாக நடித்தார். இதன் பிறகும் சரியாக படப்பிடிப்புகள் அவருக்கு வரவில்லை.

Mahima Nambiar
Mahima Nambiar [Image Source: X/@ctcupdates]

கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதற்கிடையில் படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அவர் போட்டோ சூட் எடுத்து தனது சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரோஸ் நிற மாடர்ன் உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

Mahima Nambiar
Mahima Nambiar [Image Source: X/@ctcupdates]

அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலானது. இதைத்தொடர்ந்து தற்பொழுதும் சில கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் மேலே பச்சை நிறத்திலும் கீழே ரோஸ் நிறத்திலும் இருக்கமான உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது பார்வை அனைவரும் கொள்ளை கொள்ளும் விதமாக உள்ளது.

Mahima Nambiar
Mahima Nambiar [Image Source: X/@ctcupdates]

இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கண்களாலேயே கொள்கிறார், தேவதை என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், மஹிமா நம்பியார் ‘நாடு’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube