வயசானாலும் உங்க அழகும் உங்கள விட்டு போகல.! பூமிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

வயசானாலும் உங்க அழகும் உங்கள விட்டு போகல.! பூமிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Bhumika

நடிகை பூமிகா சாவ்லா, 2001ம் ஆண்டு விஜய் நடிப்பில் பி.ஏ.அருண் பிரசாத்தின் இயக்கத்தில் வெளியான பத்ரி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இதன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், தான் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

இவர் அடுத்ததாக ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அதில் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் ஒரு பாதியில் அமைதியான பெண்ணாகவும், பிறகு ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். இதன்பிறகு அவருக்கு தமிழ் திரைப்படங்களில் அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனாலும் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது எம் ராஜேஷ் எழுதி இயக்கி வரும் பிரதர் என்கிற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்து வருகிறார். 1978ல் பிறந்த இவருக்கு இப்பொழுது 45 வயது ஆகிறது. இருந்தும் அவர் அழகில் கொஞ்சம் கூட மாற்றமில்லை.

தனக்கு திருமணம் முடிந்த போதிலும் அவர் ரசிகர்களை குஷி படுத்துவதற்காக பல வித்தியாசமான உடைகளை அணிந்து அட்டகாசமான புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது லெகங்கா மாடல் உடை அணிந்து பல கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களைப் பார்க்கையில் அவருக்கு 45 வயது ஆனது போலவே தெரியவில்லை. இன்னும் இளமை மாறாமல் இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் வயதானாலும் உங்கள் அழகு உங்களை விட்டு போகவில்லை என்பது போல தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Join our channel google news Youtube