இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால்! வெளியானது திருமண புகைப்படங்கள்…

இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால்! வெளியானது திருமண புகைப்படங்கள்…

Amala Paul - Jagat Desai

கடந்த சில நாட்களாகவே நடிகை அமலா பாலுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக ஒரு தகவல் பரவி கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் தன்னுடைய காதலன் இவர் தான் என அறிவித்திருந்தார். இந்த நிலையில், நடிகை அமலாபால் இன்று தனது புதிய காதலனை இரண்டாம் திருமணத்தை செய்துகொண்டார்.

முடிந்தது திருமணம்

அக்டோபர் 26 அன்று தனது 32 வது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகை அமலா பால், அன்றைய தினம் தன்னுடைய காதலனை அறிவித்திருந்த நிலையில், இன்று கேரளாவின் கொச்சியில் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், தனது காதலன் ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இந்த ஜோடி தங்கள் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அதை உறுதிப்படுத்தினர்.

தங்கள் திருமணத்தை அறிவிக்கும் வகையில், தங்களது இன்ஸ்டாகிராம் பதிவில் அமலா பால் மற்றும் ஜகத் தேசாய், “இரண்டு ஆன்மாக்கள், ஒரு விதி, இந்த வாழ்நாள் முழுவதும் என் தெய்வீகப் பெண்ணுடன் கைகோர்த்து நடக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Jagat Desai (@j_desaii)

இரண்டாம் திருமணம்

இது இவருக்கு இரண்டாம் திருமணம் என்றே சொல்ல வேண்டும். முன்னதாக, நடிகை அமலா பால் இதற்கு முன்பு இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், அவர்கள் 2016 இல் பிரிந்தனர் மற்றும் பிப்ரவரி 2017 இல் நீதிமன்றத்தால் விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காதலில் விழுந்த அமலா பால்

அமலா பாலின் காதலர் ஜெகத் தன்னுடைய காதலை சொல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு அமலா பாலை ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அங்கு சிலரை நடனமாட வைத்து மோதிரம் கொடுத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தி அமலா பாலுக்கு ப்ரொபோஸ் செய்தார்.

இதனை பார்த்து மெய் சிலிர்த்து போன அமலா பாலா உடனடியாக மோதிரத்தை வாங்கி கொண்டு ஜெகத் காதலை ஏற்றுக்கொண்டார். இது தொடர்பான வீடியோவையும் அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Jagat Desai (@j_desaii)

Join our channel google news Youtube