போதை பொருள் விவகாரம் – ஆஜராகாததால் நடிகர் விவேக் ஓபராய் மனைவிக்கு மறு சம்மன்!

போதை பொருள் விவகாரம் – ஆஜராகாததால் நடிகர் விவேக் ஓபராய் மனைவிக்கு மறு சம்மன்!

Default Image

போதை பொருள் விவகாரம்  தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகர் விவேக் ஓபராய் மனைவிக்கு மறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கன்னட திரையுலகில் போதை பொருள் தொடர்பான விசாரணை அதிரடியாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நடிகைகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கன்னட திரையுலகில் போதை பொருள் சப்ளை செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் ஆல்வா அவர்களின் மகன் ஆதித்யா மீது வழக்கு தொடரப்பட்டுஉள்ளது.

ஆப்பினால் அவர் தலைமறைவாக உள்ளதாகவும் அவர் தனது சகோதரியாகிய நடிகர் விவேக் ஓபராய் மனைவி பிரியங்கா வீட்டில்தான் தங்கி இருப்பார் எனவும் சந்தேகித்த போலீசார் இது தொடர்பாக பிரியங்கா ஆஜராகும்படி குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.ஆனால் நேற்று நடந்த விசாரணைக்கு பிரியங்கா வராத நிலையில் மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube