“விசித்திரன்” திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்ட நடிகர் சூர்யா..!

நடிகர் ஆர்கே சுரேஷ் நடிப்பில் இயக்குனர் எம் பத்மகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள விசித்திரன் திரைப்படத்தின் ட்ரைலரை தற்போது நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இயக்குனர் எம் பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் நாகராஜன், மாளவிகா, பலர் நடிப்பில் வெளியான மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜோசப் இந்த படத்தை தற்போது தமிழ் ரீமேக் உரிமையை ஆர்கே சுரேஷ் கைப்பற்றியுள்ளார்.

இந்த படத்தில் ஆர்கே சுரேஷ் நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தை இயக்குனர் எம் பத்மகுமார் இயக்கியுள்ளார். இயக்குனர் பாலா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி நடந்து வந்தது. மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள்ளார். படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் அதனை தொடர்ந்து தற்போது இந்த விசித்திரன்  திரைப்படத்தின் டிரைலரை பிரபல நடிகரான சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த டிரைலர் வைரலாகி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.