வீடியோ காலில் தொடர்பு கொண்டு சப்-இன்ஸ்பெக்டரை வாழ்த்திய நடிகர் சிரஞ்சீவி!

வீடியோ காலில் தொடர்பு கொண்டு சப்-இன்ஸ்பெக்டரை வாழ்த்திய நடிகர் சிரஞ்சீவி!

Default Image

வீடியோ காலில் தொடர்பு கொண்டு சப்-இன்ஸ்பெக்டரை வாழ்த்திய நடிகர் சிரஞ்சீவி.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவால், மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்ற நிலையில், வேலையின்றி பலரும் ஒரு வேலை உணவிற்கு  வழியில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். 

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் சப் இன்ஸ்பெக்டராக சுபஸ்ரீ நாயக் என்பவர், கொரோனா தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மனநலம் குன்றிய வயதான பெண்ணுக்கு தான் வைத்திருந்த உணவை ஊட்டிவிட்டுள்ளார். 

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இதனை பார்த்த தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, சப் இன்ஸ்பெக்டரை வீடியோ காலில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். 

Join our channel google news Youtube