பறந்தது இளம் காதலி…பப்லுவை பிரிந்த ஷீத்தல்? திடீரென என்னாச்சு? வெளியான திடுக்கிடும் தகவல்.!

முதல் மனைவியை பிரிந்த நடிகர் பப்லூ பிரித்விராஜ், ஷீத்தல் என்ற 23 வயது பெண்னை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில், அந்த இளம் பெண்ணுக்கும் இருவருக்கும் கிட்டத்தட்ட 30 வயது வித்தியாசம் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வந்தனர். இப்பொது இவர்களும் பிரிந்து விட்டதாக ஒரு வதந்தி தீயாக பரவி வருகிறது.

நடிகர் பப்லூ பிரித்விராஜ், 1971 ஆம் ஆண்டு ‘நான்கு சுவர்கள்’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1980கள் முதல் 2000கள் காலகட்டங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பல படங்களில் முன்னணி நடிகராகவும், துணை நடிகர் மற்றும் வில்லன் என ஒரு கலக்கு கலக்கினார்.

தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமான இவர் ஜோடி நம்பர் ஒன் உட்பட பல பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் 1994-ம் ஆண்டு பீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அஹத் என்ற மகன் உள்ளார். இருப்பினும், சமரசம் செய்ய முடியாத சில கருத்து வேறுபாடு காரணமாக, அவரது  முதல் மனைவியான பீனாவிடம் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, ஆந்திராவை சேர்ந்த ஷீத்தல் என்ற 24 வயது பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்று கிசுகிசுக்கப்பட்டது. பின்னர், 57 வயதானநடிகர் பப்லூ, விஜே பார்வதியுடன் ஒரு நேர்காணலின் போது, ஜிம்மில் தனது தனிப்பட்ட பயிற்சியாளரான ஷீத்தல் என்பவரை சந்தித்துள்ளாராம்.

அப்போது, ஒருவரையொருவர் சந்தித்த கொண்ட அவர்கள் இருவருக்கும் இடையே நாளடைவில் காதல் மலர தொடங்கியதாகவும், இப்பொது திருமணம் செய்துகொள்ளவில்லை, லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாக கூறினார்.

ஓயாத மன்சூர் அலிகான் விவகாரம்…நடிகை த்ரிஷாவுக்கு காவல்துறை கடிதம்.!

ஆனால், சமீப காலமாக அவர்கள் இருவரும் ஒன்றாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் ஒன்றாக பங்கேற்கவில்லை. அடிக்கடி இருவரும் எடுத்துக்கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியிடுவது உண்டு. ஆனால் சில நாட்களாகவே வெளியாகவில்லை. அதுபோல், முன்னதாக இருவரும் இயக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இருந்து இருவருமே நீக்கியுள்னர். இதனையடுத்து இவர்கள் இருவரும் இப்பொது உறவில் இல்லை என்றும், பேசிக்கொள்ளவில்லை என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை எழுப்ப தொடங்கினர்.

ரசிகர்களுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய பார்க்கிங்? முழு விமர்சனம் இதோ!

அந்த வகையில், சமூக வலைத்தளத்தில் ஷீத்தலிடம் ஒரு ரசிகர் நீங்கள் இருவரும் பிரிந்து விட்டீங்களா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஷீத்தல் லைக்  செய்துள்ளார்.  இதனை வைத்து பப்லு – ஷீத்தல் இருவரும் பிரிந்ததாக ஒரு வதந்தி பரவ ஆரம்பித்தது. அது மட்டும் இல்லாமல், ஷீத்தல் இல்லாமல் கொண்டாடிய தனது பிறந்தநாள் வீடியோவை பப்லூ, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Babloo Prithiveeraj (@prithiveeraj)

இப்போது, சில மனக்கசப்பு காரணமாக உண்மையிலேயே இருவரும் பிரிந்து விட்டனரா? அல்லது இருவர் குறித்து இணையத்தில் பரவும் செய்திகள் வரும் வதந்திகளா? என்ற கேள்விகளுக்கு விரைவில் அவர்கள் இருவரும் சரியான விளக்கம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Rukmini Sheetal (@sheetal_sheetu1)