ஐபோன் 15-க்கு அதிரடி ஆஃபர்! – பிளிப்கார்ட்..!

ஐபோன் 15-க்கு அதிரடி ஆஃபர்! – பிளிப்கார்ட்..!

ஐபோன்கள் என்றாலே பலருக்கும் பிடித்த ஒன்றாக இருந்து வருகிறது. அதற்கு காரணமாக இருந்து வருவது அவற்றின் கேமராவின் தரம் மற்றும் ரிச்சான ஒரு லுக். பலரும் இந்த போனை வாங்கி உபயோகம் செய்து வருகிறார்கள். அதனால் ஐ போன் நிறுவனமும் அவ்வபோது புது புது மாடல்களையும், அப்டேட் களையும் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது.

உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை என்ன தெரியுமா?

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் -ஐ அறிமுகம் செய்தது. இந்த போனின் அம்சங்கள் மற்றும் லுக் அருமையாக இருந்த காரணத்தால் பலரும் இந்த போனை வாங்கினார்கள். 128 ஜி.பி ஸ்டார்ஜ் கொண்ட போன் ரூ. 79,990-க்கும் 256 ஜி.பி.விலை ரூ.89,900-க்கும், 512 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ. 1 1,09,900 என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது பிளிப்கார்ட்டில் ஐபோன் 15 128GB மாடலை வங்கி சலுகைகளுடன் வெறும் 62,224 ரூபாய்க்கு பெறலாம் என தற்போது ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது. இருந்தாலும், கிடைக்கும் தன்மை ( Stock ) மற்றும் வண்ண விருப்பங்களைப் பொறுத்து விலை மாறுபடும்.

இந்நிலையில், நீங்கள் பரிமாற்ற தள்ளுபடிகள் ( Exchange Offer ) மூலம் இன்னும் அதிக பணத்தை சேமிக்க முடியும். வங்கி அட்டை ( Bank Cards ) மூலம் பணம் செலுத்தினால் ரூ.3,825 தள்ளுபடியும், பழைய போனை வர்த்தகம் செய்தால் ரூ.54,990 வரை தள்ளுபடியும் பிளிப்கார்ட் நிறுவனம் வழங்குகிறது.

நீங்கள் கட்டணமில்லா EMI திட்டங்களையும் ( NO-COST EMI ), UPI தள்ளுபடிகளையும் தேர்வு செய்தும் வாங்கிக்கொள்ளலாம்.  உதாரணமாக,  ஐபோன் 14 ப்ரோ மேக்ஸை, ஐபோன் 15க்கு மாற்றி ரூ.54,900 தள்ளுபடி பெறலாம். அது மட்டுமின்றி உங்களிடம் ஐபோன் 12 போன்ற பழைய ஐபோன் இருந்தாலும், அதை வர்த்தகம் (Buying and Selling) செய்வதன் மூலம் ரூ.20,850 தள்ளுபடி பெறலாம் என்று பிளிப்கார்ட்  நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஐபோன் வாடிக்கையாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Join our channel google news Youtube