தெலுங்கிலும் வில்லனாக அதிரடி காட்ட ரெடியாகும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன்.!

தெலுங்கிலும் வில்லனாக அதிரடி காட்ட ரெடியாகும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன்.!

தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் உருவாகி வரும் கில்லாடி படத்தில் நடிகர் அர்ஜூன் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படும் அர்ஜூன். தற்போது ஹீரோக்களிலிருந்து தடம் மாறி வில்லனாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட விஷால் நடித்த இரும்புத்திரை படத்தில் மாஸான வில்லனாக நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இந்த நிலையில் இவர் தற்போது தெலுங்கு திரையுலகில் உள்ள முன்னணி நடிகருக்கு வில்லனாக நடிக்க உள்ளார் . தெலுங்கு நடிகரான ரவி தேஜா சமீபத்தில் வெளியான கிராக் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து ‘கில்லாடி’ படத்தில் நடித்து வருகிறார்.ஹைதராபாத்தில் நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது அர்ஜூன் இணைந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube