மருத்துவக் கழிவுகள்; முறையாக கையாளாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை..! மா.சுப்பிரமணியன் தகவல்..

மருத்துவக் கழிவுகள்; முறையாக கையாளாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை..! மா.சுப்பிரமணியன் தகவல்..

MaSubramanian

மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை.

மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று மதுரை வந்தடைந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசுகையில், மதுரை சித்திரை திருவிழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு தொற்றுநோய் பாதிப்பு வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு மதுரையில் குடிநீர் சுகாதாரமாக வழங்க ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆண்டு 20 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழாவையொட்டி 56 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும் எனவும் மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.
Join our channel google news Youtube