ஷ்ரத்தா கொலை வழக்கில் குற்றவாளி அஃப்தாப்… குற்றப்பத்திரிகை தாக்கல்.!

ஷ்ரத்தா கொலை வழக்கில் குற்றவாளி அஃப்தாப்… குற்றப்பத்திரிகை தாக்கல்.!

AftabPoonawalaChargesheet

ஷ்ரத்தா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அஃப்தாப் பூனாவாலா மீது டெல்லி சாகேத் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல்.

நாட்டையே உலுக்கிய டெல்லி ஷ்ரத்தா கொலைவழக்கில் தன்னுடன் லிவின்(Live-in) உறவில் வாழ்ந்துவந்த ஷ்ரத்தா வால்கர் என்பவரை கொன்று, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டியதாகக் கூறி குற்றம் சாட்டப்பட்ட அஃப்தாப் பூனாவாலா, கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

டெல்லியின் சாகேத் நீதிமன்றத்தில் கூடுதல் அமர்வு நீதிபதி மனிஷா குரானா கக்கர் முன் அஃப்தாப் பூனாவாலா ஆஜர்படுத்தப்பட்டார், அங்கு அவர் மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. அதில் அஃப்தாப் பூனாவாலா மீது இபிகோ பிரிவு 302 (கொலை) மற்றும் பிரிவு 201 (ஆதாரங்களை அழிப்பது) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அஃப்தாப் நீதிமன்றத்தில் ஜூன் 1 ஆம் தேதி விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். விசாரணையின் போது, சிறப்பு அரசு வழக்கறிஞர் அமித் பிரசாத், ஷ்ரத்தா வாக்கர் தனது உளவியலாளரிடம் பூனாவாலா தன்னைதேடிக் கண்டுபிடித்து கொன்றுவிடுவார் என்று கூறிய ஆடியோ/வீடியோ பதிவை சமர்பித்தார்.

அஃப்தாப் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அக்‌ஷய் பண்டாரி, குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஒரே நேரத்தில் கொலை மற்றும் சாட்சியங்களை அழித்ததாக குற்றம் சாட்ட முடியாது என்றும், தனது தரப்புதாரரை குற்றவாளி என்று கூறாமல் அவர் மீதான குற்றத்தை அரசுத் தரப்பு நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.

ஷ்ரத்தா வாக்கரின் தந்தை விகாஸ் வாக்கர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா, மகள் இறந்து ஒருவருடம் நெருங்குவதால் இறுதிச்சடங்கை செய்வதற்கு ஷ்ரத்தாவின் எலும்புகளை தர உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார், மேலும் அஃப்தாப்பிற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் விகாஸ் வாக்கர் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் டெல்லி போலீசார், அஃப்தாப் தனது லிவின்(live-in) துணையை எப்படி கொன்று அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தார் என்பதை விவரிக்கும், 6629 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

Join our channel google news Youtube