வீட்டை சூழ்ந்த வெள்ளம்…அமீர் கான் – விஷ்ணு விஷால் பத்திரமாக மீட்பு.!

வீட்டை சூழ்ந்த வெள்ளம்…அமீர் கான் – விஷ்ணு விஷால் பத்திரமாக மீட்பு.!

Vishnu Vishal

மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் முடிங்கியுள்ளது. பலரும் தங்குவதற்கு இடம் இல்லாமல் சாப்பிட உணவு இல்லாமல் சிரமத்தில் இருக்கிறார்கள். பல இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும்பாலான சாலை போக்குவரத்து சேதமடைந்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில், என்னுடைய வீட்டில் தண்ணீர் மட்டம் அதிகரித்து வருகிறது. தண்ணீரின் நிலைமை ரொம்பவே மோசமாக உயர்ந்து வருகிறது. நான் உதவி கேட்டு இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என குறிப்பிட்டு இருந்தார்.

இதனையடுத்து, வீட்டை சூழ்ந்த வெள்ளத்தில் இருந்து நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷாலை படகு மூலம் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டை மழைநீர் சூழ்ந்துள்ளதாக விஷ்ணு விஷால் தனது X தளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் விரைந்து இந்த துரித நடவடிக்கயை மேற்கொண்டுள்ளது.

அட இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை தமிழ் பிரபலத்தின் மகளா.?

தற்பொழுது, விஷ்ணு விஷால் நன்றி தெரிவிக்கும் வகையில் X தளத்தில் ஒரு பதிவையும் பதிவிட்டுள்ளார். அதில்,  சிக்கித் தவிக்கும் எங்களைப் போன்ற மக்களுக்கு உதவிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நன்றி, காரப்பாக்கத்தில் மீட்பு பணிகள் தொடங்கியுள்ளன. ஏற்கனவே 3 படகுகள் இயங்குவதை பார்த்தேன். இதுபோன்ற சோதனையான காலங்களில் தமிழக அரசின் சிறப்பான பணி, அயராது உழைக்கும் அனைத்து நிர்வாக மக்களுக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

Join our channel google news Youtube