அழகான காதல் தொகுப்பாக வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் 'ஆஹா கல்யாணம்' விமர்சனம்!

அழகான காதல் தொகுப்பாக வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் 'ஆஹா கல்யாணம்' விமர்சனம்!

Default Image

தற்போது வெள்ளித்திரைக்கு அடுத்து சின்னதிரை என்றால் அது யூ-டியூப் எனும் இணைய திரை தான். முதலில் புதிய சினிமா நிகழ்ச்சிகள், புத்தம்புது அசத்தலான சீரியல்கள் பார்ப்பதென்றால் சின்னத்திரையில் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் தற்போது இணைய திரையில் கிட்டத்தட்ட அனைத்து புதுவிதமான நிகழ்ச்சிகளும், இளைஞர்களை அதிகம் கவரும் அசத்தலான சீரியல்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. இதில் தற்போதை சென்ஷேசனல் ஹிட் என்றால் உனக்கென்னப்பா யு – டியூப் சேனலில் ஒளிபராப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியல்தான்.

 
இளைஞர்கள் மத்தியில் NP எனும் நரேந்திர பிரசாத்தும், பவி டீச்சராக சின்ன சின்ன முக பாவனைகளில் அசத்தும் பிரிஜிடாவும், காதலனுக்கு வைத்த சோதனையில் தற்போது தனது காதல் சிக்கி தவிப்பதை தன் நடிப்பின் மூலம் காட்ட முயற்சிக்கும் தேஜா வெங்கடேஷ், இதனிடையே கலாட்டா குறும்பு காதல் ஜோடியாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் அரவிந்த் மற்றும் சந்தியா, பிரச்சனைகளை தெரிந்து செய்கிறாரா தெரியாமல் செய்கிறாரா என குழப்பத்தில் பிரகதீஸ் கதாபாத்திரம் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து விட்டது.

முதல் எபிசோடில் முதல் காட்சியிலேயே NP – மித்ரா ( தேஜா வெங்கடேஷ் ) காதல் முறிவு காட்சியின் மூலம் இவர்களுக்குள் என்னவானது என ரசிகர்களை உற்று நோக்க வைத்துள்ளார் இயக்குனர். தனக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டனர் எனவும், வீட்டில் அனைவருக்கும் பிடித்துவிட்டது எனவும் கூற, இதில் மனமுடைந்த NP, மித்ராவை தொந்தரவு செய்யாமல் பிரிந்து விட நினைக்கிறார். பிளாஷ்பேக் காட்சியில் மித்ரா – NP காதல்  காதல் காட்சிகள், அவர்களுக்குள்ளான ஈகோ, 100 ருபாய் நோட்டில் புரபோஸ் செய்வது, என தொடர்ந்து, பின்னர், தற்காலத்தில் காதல் முறிவானது  தெரிந்ததும், கடைசியாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு தனது போன் நம்பரை மாற்றிவிடுகிறார். உண்மையில், மித்ரா தன் தோழி கூறிய யோசனை படி NPயிடம் கூறிய சிறிய பொய் தன் காதலுக்கு இவ்வளவு பெரிய ஆபத்தை உண்டாகிவிட்டதே என மனமுடைகிறார். அதேபோல தன் காதல் தோற்றுப்போன விரக்தியோடு தன் வேலையை விட்டு நாயகன் NP தன் சொந்த ஊருக்கு புறப்படுகிறார்.

இரண்டாவது பகுதியில், மித்ரா – NPயின் பழைய கல்லூரி காதல் காட்சிகள் ரசிக்க வைத்துள்ளது. NPயை துரத்தி துரத்தி காதல் செய்து கவர்கிறார் மித்ரா. பின் காதலை பரிமாறிய பின்னர், வரும் சண்டை, அதன் பின் சமாதானம், பஸ்ஸில் கிஸ் என  பார்த்து பழகிய காட்சிகள் என்றாலும் ரசிக்க வைக்கிறது. தன் காதலனிடம் உண்மையை சொல்ல நினைக்கும்போது மித்ராவின் வீட்டில் புதிய பிரச்சனை உருவெடுத்து அவரை எங்கும் செல்ல விடாமல் ஆக்கிவிடுகிறது.

அடுத்த பாகத்தில், NP சொந்த ஊரில் அவரது பழைய நண்பர்களான பிரச்சனையாக ப்ரகதீஸ் மற்றும் ஊருக்குள் வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவகார்த்திகேயன் போலவே சுற்றிவரும் அரவிந்தும் தங்கள் என்ட்ரி கொடுக்கின்றனர். அரவிந்த்திற்கு இருக்கும் கலாட்டாவான காதல் இருக்கிறது. அதிலும் ஒரு சஸ்பென்சோடு அப்பகுதி முடிகிறது.

நான்காவது பாகத்தில் தான் பவி டீச்சராக இளைஞர்களை மிகவும் கவர்ந்த ப்ரஜிடா இன்ட்ரோ ஆகிறார். இந்த பகுதியில் பிரச்னை கதாபாத்திரம் NPயின் காதல் தோல்வியை  வீட்டில் போட்டுக்கொடுக்க, அதனால் மாமா பெண்ணை திருமணம் செய்துவைக்க வீட்டில் ஏற்பாடு செய்ய அப்போது அராத்து சந்தியாவாகவே அறிமுகமாகிறார் சந்தியா. திடீரென NPயை பிடிக்கவில்லை என கூற, NPயின் நண்பன் அரவிந்த் நிம்மதி பெருமூச்சு விட்டு, சந்தியாவை பார்த்து கண்ணடித்து எஸ்கேப் ஆவது என அந்த பகுதியும் சுவாரஸ்யமான எதிர்பார்ப்போடு முடிவடைகிறது. அந்த பகுதியில் தான் பவி டீச்சராக எண்ட்ரியாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் ப்ரிஜிடா.

அடுத்த, பகுதி நிச்சயம் கேன்சல், பவி டீச்சரின் அழகான முகபாவனைகள், NPயின் காதல் நினைவுகள், என தொடர NPயின் மாமா பெண்ணைதான் தான் காதலிப்பதாக NPக்கு ஷாக் கொடுக்கிறார் அரவிந்த். அரவிந்துடன் கோபம் பிறகு சேர்க்கை, அதற்கிடையில் பவி டீச்சர் கோவிலில் வைத்து NPயிடம் தன் காதலை சொல்லிவிட்டு NPயின் பதிலுக்காக பவி டீச்சரும்  நாமும் காத்திருக்க அப்படியே அந்த பகுதியும் முடிந்துவிட்டது.
இந்த 6ஆம் பகுதியில், மித்ராவின் அப்பா மருத்துவமனையில் இருக்கிறார். இதற்கிடையில் பவி டீச்சரை பிடித்திருக்கிறது என NP சொல்லிவிடுகிறார். ஆனால் தன் காதல் தோல்வியை பற்றி சொல்ல எனோ NPக்கு சந்தர்ப்பமே கிடைக்காமல் போய் விடுகிறது. இருவருக்குமான காதல் காட்சிகளாக இந்த பகுதி முடிவடைந்து விடுகிறது.

7வது பகுதியில் அராத்து ஆனந்தி, அரவிந்தின் கலாட்டா காதல் காட்சிகளாகவும், பவி டீச்சர் மற்றும் NPயின் அழகான காதல் காட்சிகள் என தீபாவளி விருந்தாக அமைகிறது. பவி டீச்சரும், NPயும் தீபாவளிக்கு ஊர் சுற்றிவிட செல்ல இருவரின் காதலும் வீட்டிற்கு தெரிந்து இரு வீட்டாரும் ஓகே சொல்லிவிட சுபம் போட்டு இந்த பகுதி முடிந்துவிடும் என பாரத்தால், திடீர் திருப்பமாக பிரச்சனையின் மூலமாக களத்தில் குதித்து விடுகிறார் மித்ரா. பழைய காதலி மித்ராவை பார்த்த ஷாக்கில் NPயும் நாமும் இருக்க அதோடு அந்த பகுதி முடிந்துவிடுகிறது.

கடைசியாக வெளியான பகுதியில், வந்திறங்கிய மித்ரா தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டு NPயை பவி டீச்சருக்கு விட்டுத்தர மறுக்கிறார். தனது தரப்பு விளக்கத்தை தன்னால் சொல்ல முடியாத சூழ்நிலைகளை விளக்குகிறார் மித்ரா. இதனால், தான் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார் NP. அந்த சமயம் அராத்து ஆனந்தி மித்ராவிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடையவே உண்மையான பிரச்சனை பெரிதாகிறது. அந்த சமயம் நம்ம பிரச்சனை ப்ரகதீஷ் மூலமாக பவி டீச்சருக்கு நடந்த உண்மை என்ன எனஅனைத்தும் தெரிந்துவிடுகிறது. இதற்கடுத்து என்ன நடக்க போகிறதோ என ரசிகர்களாகிய நாம் அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம்.

இதில் பவி டீச்சராக வளம் வந்த ப்ரிஜிடாவிற்கு தற்போது தளபதி விஜய் நடித்துவரும் புதிய படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த பிளாக் ஷீப் சேனலில் இருக்கும் பலருக்கும் சினிமா வாய்ப்பு வந்துள்ளது. ப்ளாக் ஷீப் எம்.டி விக்னேஷ்காந்த் பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். LOVE WITH ALL அன்பு கோலமாவு கோகிலா, அடுத்து வரவுள்ள ஆதித்ய வர்மா என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். C.F.O கார்த்திக் வேணுகோபால் சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேராமையுண்டு ஓடுராஜா படத்தினை இயக்கினார் இதில் பிளாக் ஷீப் டீம்மில் இருந்து பெரும்பாலானோர் நடித்து இருப்பர். C.O.O சுட்டி அரவிந்த், நட்பே துணை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த ஆஹா கல்யாணம் வெப் சீரிஸ் ப்ளாக் ஷீப் சேனலின் கிளை சேனலான உனக்கென்னப்பா சேனலில் வெளியாகி வருகிறது. இந்த உனக்கென்னப்பா சேனனில் பல வெப் சீரிஸ் தொடங்கப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இவ்வளவையும் சொல்லிவிட்டு இந்த ஆஹா கல்யாணம் வெப் சீரிஸ் இயக்குனர் பெயரை குறிப்பிடாமல் போனால் நன்றாக இருக்காது. ரசிகர்களின் ரசனை அறிந்து இயக்கி வரும் இளம் இயக்குனர் பெயர் யுவராஜ் சின்னசாமி. ஒளிப்பதிவு காட்சன் ஞானராஜ். எடிட்டிங் கவுதமன்.
M.மணிகண்டன்

Join our channel google news Youtube