,

விமர்சனங்களுக்கு வசூலில் பதிலடி கொடுக்கும் ‘ஆதிபுருஷ்’…400 கோடி வசூல் செய்து மாஸ் சாதனை.!!

By

இயக்குனர் ஓம் ரவுத்தின் இயக்கத்தில் பிரபாஸ், சைஃப் அலி கான் மற்றும் கிருத்தி சனோன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தை பார்த்த பலரும் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சரியில்லை, படத்தின் ஸ்க்ரீன் பிளே சரியில்லை.

பொம்மை படம் போல இருக்கிறது என வெளிப்படையாகவே கருத்துக்களை கூறி வருகிறார்கள். ஆனால், விமர்சனங்கள் எப்படி வந்தாலும், வசூலில் படம் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. படம் திரையரங்குகளில் ஆறாவது நாளில் வசூலித்த ரூ.7.5 கோடியில், இந்தி பதிப்பு ரூ.4 கோடியை ஈட்டியது.

இதன் மூலம் இந்தியா முழுவதும் படத்தின் மொத்த வசூல் 255.3 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது, உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வெளியான 6 நாட்களில் உலகம் முழுவதும் 410 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

AdiPurush 6 Days WW Collections