இரவு பொழுதில் துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ஆதி – நிக்கி கல்ராணி தம்பதி.!

இரவு பொழுதில் துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ஆதி – நிக்கி கல்ராணி தம்பதி.!

Aadhi Pinisetty - Nikki Galrani

சென்னை பெருவெள்ளம் பொதுமக்களை புரட்டி போட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளுடன் நடிகர்கள் சிலரும் தற்போது களப்பணியில் ஈடுபட்டுள்ளது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

புயல் வீசிய அடுத்த நாளே நடிகர்கள் கார்த்தி, சூர்யா, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் தங்களால் முயன்ற நிதிகளை வழங்கினர். அதையும் தாண்டி நடிகர்கள் பார்த்திபன், KPY பாலா போன்றவர்கள் களத்தில் இறங்கி மக்களுக்கு பண உதவி மற்றும் உணவு வழங்கி வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார்னு கூப்பிடாதீங்க! நடிகை நயன்தாரா வேண்டுகோள்!

அந்த வகையில், தற்பொழுது நடிகர் ஆதியும், அவரது மனைவி நடிகை நிக்கி கல்ராணியும் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்கினர். முன்னதாக, வெள்ளம் காரணமாக வீட்டை விட்டு வெளிவராமல் சிக்கி தவித்த மக்களுக்கு பகல் நேரங்களில் வீடு வீடாக சென்று உணவு வழங்கினர்.

ஆனால், புதுமண தம்பதிகளான ஆதி-நிக்கி கல்ராணி ஆகியோர் இரவு நேரங்களில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு பல இடங்களுக்கு சென்று உணவு வழங்கியது பாராட்டுகளை பெற்றுள்ளது.

நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இருவரும் இணைந்து சில படங்களில் நடித்ததன் மூலம் காதல் மலர்ந்த நிலையில், இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய பெற்றோர்களின் முன்னிலையில், திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்களது படங்களில் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

Join our channel google news Youtube