ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியை தொடங்கிய தல தோனி! வைரலாகும் வீடியோ..

ஆண்டு தோறும் ஏப்ரல், மார்ச் ஆகிய மாதங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று  வருகிறது. அந்த வகையில். இதுவரை 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்து இருக்கிறது. 17-வது சீசன் இந்த ஆண்டு மார்ச் மாதம் கடைசியில் தொடங்கும் என கூறப்படுகிறது.  கடந்த சீசனில் கோப்பையை வென்ற சென்னை அணி இந்த முறை கோப்பையை வெல்லவேண்டும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.

வழக்கம் போல இந்த ஆண்டும் சென்னை அணியை தோனி தான் கேப்டனாக வழி நடத்தவுள்ளார். இருந்தாலும் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கள் முடிந்த பிறகு ஓய்வு பெற்றுவிடுவார் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கில் வேண்டாம் ரோஹித் கூட அவரை இறக்குங்க! கிரண் மோர் கருத்து! 

எனவே , இந்த முறையும் அவர் சென்னை அணிக்காக கோப்பையை வென்று கொடுக்கவேண்டும் என ரசிகர்கள் காத்துள்ளனர். ரசிகர்களின் காத்திருப்பை பூர்த்தி செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு தோனியும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாட தயாராகி வருகிறார். அவர் தீவிரமாக பயிற்சி எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தோனி விரைவில் பயிற்சியை தொடங்குவார் எனவும் வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் சென்னையில் பயிற்சி முகாம் நடைபெறும் எனவும் தெரிவித்து இருந்தார். அதன்படி, ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், தோனி அதற்குள் தன்னுடைய பயிற்சியை தொடங்கி இருக்கிறார். அவர் பயிற்சி செய்யும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.