தேர்வு நேரங்களில் மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்க சிறப்பு முகாம்

தேர்வு நேரங்களில் மாணவர்களிடையே ஏற்படும் மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணத்தை தவிர்க்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பயிற்சி முகாமில் 300க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

தேர்வுகளின் போது மாணவர்களிடையே ஏற்படும் பாதிப்புகள் மனஅழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணத்தை போக்க அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேர்வு நேரங்களில் மாணவர்களிடையே ஏற்படும் மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணத்தை கண்டறிந்து அவற்றை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பயிற்சி முகாமில் மாவட்டம் முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment