இந்த புகைப்படத்தில் இருக்கும் இருவர் யாருனு தெரிகிறதா? இந்த ஜாம்பவானின் மகன்களா!

இந்த புகைப்படத்தில் இருக்கும் இருவர் யாருனு தெரிகிறதா? இந்த ஜாம்பவானின் மகன்களா!

venkat prabhu gangai amaran

சினிமாவில் இருக்கும் பிரபலங்களின் சிறிய வயது புகைப்படங்கள் சமீபகாலமாக வெளியாகி ட்ரெண்ட் ஆகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில் தற்போது இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டுள்ள கங்கை அமரன் கையில் இரண்டு பசங்களை தூக்கி வைத்து இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது.

அந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு பேர் வேறு யாரும் இல்லை கங்கை அமரனின் மகன்களான இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம் ஜி தான். இன்று கங்கை அமரன் தன்னுடைய 76-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஆடை இல்லாமல் நடிப்பது தவறு இல்லை! அனிமல் பட நடிகை திரிப்தி டிம்ரி பேச்சு!

அந்த வகையில், தன்னுடைய தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய சிறிய வயதில் தன்னுடைய தந்தை மற்றும் தம்பி பிரேம் ஜி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியீட்டு தனது தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

புகைப்படத்தில் இருப்பது கங்கை அமரன் தான் என்று கூட தெரியாத அளவிற்கு அவரும் இருக்கிறார் . அதைப்போல பிரேம் ஜி மற்றும் வெங்கட் பிரபுவும் மிகவும் குட்டியாக இருக்கிறார்கள். எனவே, இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் வெங்கட் பிரபு குடும்பம் சின்ன வயதிலே அழகாக இருக்காங்களே என கூறிவருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்

gangai amaran family
gangai amaran family / @Venkat Prabhu
Join our channel google news Youtube