தன்னுடன் பேச மறுத்த சிறுமிக்கு 51 முறை ஸ்க்ரூடிரைவர் குத்து.! முன்னாள் பேருந்து நடத்துனர் வெறிச்செயல்.!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 வயது இளம்பெண்ணை முன்னாள் பேருந்து நடத்துனர் ஒருவர் தன்னுடன் பேசவில்லை என கூறி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது. 

சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்டின் பம்ப் ஹவுஸ் காலனியில் 20 வயது பெண்ணை பேருந்து நடத்துனர் ஒருவர் ஸ்க்ரூ டிரைவரால் குத்தி கொலை செய்துள்ளார்.

அந்த இளம்பெண் மூன்று வருடத்திற்கு முன்னர், கொலையாளி பேருந்து நடத்துனர் வேலை செய்த பேருந்தில் பயணித்ததாகவும், அப்போது நடத்துனருக்கும், இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதாவும், அதன் பிறகு அந்த பெண் நடத்துனருடனான தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபமான அந்த பேருந்து நடத்துனர் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை ஸ்க்ரூ டிரைவரால் 51 முறை குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அந்த இளம்பெண் உயிரிழந்துள்ளார். பிறகு அந்த கொலையாளி அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

பின்னர், அந்த இளம்பெண்ணின் சகோதரர் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள கொலையாளியை தேடி வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment