வலிமை ஸ்டைலில் ‘விடாமுயற்சி’ அப்டேட் கேட்ட ரசிகர்! அதுவும் யார் கிட்ட தெரியுமா?

வலிமை ஸ்டைலில் ‘விடாமுயற்சி’ அப்டேட் கேட்ட ரசிகர்! அதுவும் யார் கிட்ட தெரியுமா?

vidamuyarchi AJITH

நடிகர் அஜித்குமார் நடிக்கும் படங்கள் என்றாலே சமீப காலமாக அப்டேட்கள் வெளியாகமல் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான வலிமை படத்திற்கு அப்டேட் கொடுக்கவே இல்லை. கிட்டத்தட்ட 1 ஆண்டுகளாக வலிமை படத்தின் அப்டேட் கேட்டுக்கொண்ட ரசிகர்கள் இருந்தார்கள்.

மற்ற படங்களின் அப்டேட் கொடுக்கும்போது அதற்கு கீழே வலிமை அப்டேட் கொடுங்க என கேட்டனர். அது மட்டுமின்றி பிரதமர் மோடி காரில் சென்றுகொண்டிருந்த போது வலிமை அப்டேட் என்று எழுதி இருந்த பதாகை ஒன்றை வைத்து கொண்டு வலிமை படத்தின் அப்டேட் கேட்டனர். இதெல்லாம் மிஞ்சும் அளவிற்க்கு கிரிக்கெட் போட்டி பார்க்கப்போகும் போது அங்கேயும் பதாகை வைத்துக்கொண்டு அப்டேட் கேட்டார்கள்.

அதைபோல் போட்டி விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த நிலையில், இங்கிலாந்து வீரர் மொயின் அலியிடம் அலி பாய் வலிமை அப்டேட் என்றும் கேட்டார்கள். இதையெல்லாம் பார்த்த பிறகு தான் வலிமை திரைப்படத்தின் அப்டேட்டை படக்குழு கொடுத்து என்று கூட கூறலாம். வலிமை படமும் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது.

இந்த நிலையில், தற்போது அஜித் அடுத்ததாக நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டும் வெளியாகாமல் இருப்பதால் வலிமை படத்திற்கு அப்டேட் கேட்டது போல அப்டேட் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வகையில், தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் அஜித் ரசிகர் ஒருவர் விடாமுயற்சி அப்டேட் கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய போட்டி மோடி மைதானத்தில் நடைபெற்ற நிலையில், அந்த போட்டியில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் மைதானத்தில் நின்று கொண்டு இருந்தார். அதனை பார்த்த ரசிகர் ஒருவர் அஸ்வின் சார் விடாமுயற்சி அப்டேட் வாங்கி கொடுங்க என கேட்கிறார் அதற்கு அஸ்வின் சிரித்துக்கொண்டே இருந்தார்.

விடாமுயற்சி படத்தில் நடந்த அதிரடி மாற்றம்! கவர்ச்சிக்காக நடிகையை மாற்றிய படக்குழு!

மேலும் விடாமுயற்சி திரைப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது ஆனால், அதிகாரப்பூர்வாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube